திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: 4,200 போலீஸார் பாதுகாப்பு!

Tiruchendur Soorasamharam Security: திருச்செந்தூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது; பாதுகாப்பு பணியில் 4,200 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Published on: November 15, 2026 at 11:01 am

தூத்துக்குடி, நவ.15, 2026: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 15) நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

கடந்த நவம்பர் 10-ம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரம் மற்றும் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் வசதிக்காக தனி வரிசைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திருப்பதியில் பெரிய சேஷ வாகன வீதிஉலா: தங்கம், வைர நகை அலங்காரத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர் ரமேஷ்!
Tiruchendur Soorasamharam 2026

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com