சென்னையில் ரொமான்ஸ் வலை.. ரூ.27 லட்சம் இழந்த டெக்கி.. தம்பதி கைது!

Tinder Love Scam: டிண்டர் செயலி மூலம் காதல் வலைவீசி, சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: November 13, 2026 at 2:42 pm

சென்னை, நவ.13, 2026: சென்னையைச் சேர்ந்த 33 வயது மென்பொருள் பொறியாளரிடம், டிண்டர் (Tinder) டேட்டிங் செயலி மூலம் பழகி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி சைபர் கிரைம் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட நபருக்கு டிண்டர் செயலியில் ‘மோனிகா’ என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து, தனிப்பட்ட அவசரத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய அந்த மென்பொருள் பொறியாளர், மொத்தம் ரூ.27 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்கப்பட்டதால் சந்தேகமடைந்த அவர், ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜெய்கார்த்திக் ராஜா (29), மயிலாப்பூரைச் சேர்ந்த மோனிகா (28) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், ஜெய்கார்த்திக் ராஜா பெண் பெயரில் போலி டிண்டர் கணக்கை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மோனிகாவும் குரல் பதிவுகளை அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இருவரிடமிருந்தும் செல்போன்கள், காசோலைப் புத்தகங்கள் மற்றும் ஏழு வங்கி அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : ரூ.66,990-க்கு ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்? ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி சலுகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com