ட்ரோன் ஆய்வறிக்கை வந்ததும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை.. திருநெல்வேலி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Illegal Quarry Action: ட்ரோன் ஆய்வறிக்கை வந்ததும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 16, 2026 at 2:37 pm

மதுரை. நவ.16, 2026: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் சட்டவிரோதமாகக் கல் குவாரி செயல்படுவதாக எழுந்த புகாரில், உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மார்ஸ் மைனிங் நிறுவனத்தின் உரிமையாளர் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி குவாரி செயல்படுத்தியதாகவும், 5 லட்சம் டன்னுக்கும் அதிகமான சரளை மண்ணையும், 4 லட்சம் டன் கருங்கற்களையும் வெட்டி எடுத்ததாகவும் மனுதாரர் சந்தனகுமார் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், போலி போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் மூலம் கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில், கும்பிகுளம் பகுதியில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அப்போது வராததால், அவரது குவாரியில் தனியாக ட்ரோன் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, ட்ரோன் ஆய்வறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட குவாரியில் சட்டவிரோதமாகக் குவாரி செயல்பாடுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : விவசாயிகள், ஆசிரியர்கள் மீது 600 வழக்குகள் ரத்து.. 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com