மத்திய – மாநில உறவு உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும்.. 72 முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தல்!

Centre State Relations Panel Demand: மத்திய – மாநில உறவு உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என 72 முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Published on: November 15, 2026 at 3:54 pm

சென்னை, நவ.15, 2026: தமிழகத்தில் மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என 72 முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இக்குழு, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்து ஆய்வு செய்து வந்தது. இக்குழு தனது முதல் அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்த நிலையில், இரண்டாம் அறிக்கையை 2027 மே மாதத்துக்குள் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தது.

ஆனால், தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த நவம்பர் 6-ம் தேதி இக்குழுவைக் கலைத்து உத்தரவிட்டது. மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இக்குழுவின் பணிகள் ஒத்துப்போவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. மேலும், குழுவின் ஆவணங்களை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ‘கான்ஸ்டிடியூஷனல் கண்டக்ட் குரூப்’ (Constitutional Conduct Group), குழுவைக் கலைத்தது பிற்போக்குத்தனமான நடவடிக்கை என விமர்சித்துள்ளது. மேலும், முதல் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள் அரசின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைத்து இரண்டாம் அறிக்கையைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் நவ.18ஆம் தேதி புயலுக்கு வாய்ப்பு.. மழைக்கு வாய்ப்பு உண்டா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com