Tamil Nadu Coastal Security: தமிழக கடலோரப் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் உள்ளன.
Tamil Nadu Coastal Security: தமிழக கடலோரப் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் உள்ளன.

Published on: November 15, 2026 at 12:07 pm
சென்னை, நவ.15, 2026: வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் நவம்பர் 13-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ரேடார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கடலில் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள், சரக்குக் கப்பல்கள் மற்றும் கடல் பயணிகளுக்கு வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள கடலோர காவல்படையின் தொலைதூர இயக்க மையங்கள் மூலம், வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் உள்ளூர் மொழிகளில் VHF தகவல் தொடர்பு அலைவரிசை வழியாக ஒலிபரப்பப்படுகின்றன. கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர நிலை ஏற்பட்டால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மக்களை வெளியேற்றுதல், நிவாரண உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கடலோர காவல்படை தயாராக உள்ளது.
இதையும் படிங்க : ஊரக உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: ரூ.1,500 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி முடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com