Mekedatu Dam Issue: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Mekedatu Dam Issue: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: November 14, 2026 at 1:24 pm
சென்னை, நவ.14, 2026: கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் என்றும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் மேகதாது அணை விவகாரத்தில் ஒருமித்த குரலில் பேசி வருவதாகவும், தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தமிழகக் கட்சிகளும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு இனியும் மௌனம் காக்கக் கூடாது என்றும், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாது அணை விவகாரத்தை நடுவர் மன்றத்துக்கு அனுப்புவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தையும், மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். காவிரி உரிமையைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : “ஆல் இஸ் வெல்.. கான்பிடன்டா இருங்க!” – குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதலமைச்சர் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com