“ஆல் இஸ் வெல்.. கான்பிடன்டா இருங்க!” – குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதலமைச்சர் விஜய்!

Childrens day 2026: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார்.

Published on: November 13, 2026 at 6:31 pm

சென்னை, நவ. 13 2026: சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு நேரில் கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கினார். மேலும், குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 61,84,566 மாணவர்களுக்கு தலா 45 கிராம் எடையுள்ள கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, நான்கு நிறுவனங்களிடம் இருந்து உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உட்பட்ட கேக்குகள் பெறப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்த்து அட்டையில், “All is well.. Confident-ஆ இருங்க..” என்ற ஊக்கமளிக்கும் வாசகத்துடன், “இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்” என்றும், “பிரியமுடன் விஜய்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எஸ்ஐஆர் நீக்கத்துக்குப் பிறகு தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com