தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 2027 புத்தாண்டில் பைரவா ரீரிலீஸ்!

Bairavaa Re-Release : புத்தாண்டு தினத்தில் மீண்டும் வெளியாகிறது விஜய்யின் ‘பைரவா’.

Published on: November 13, 2026 at 2:00 pm

Updated on: November 13, 2026 at 2:01 pm

சென்னை, நவ.13, 2026: தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த மறுவெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பரதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

சென்னையில் வசூல் முகவராகப் பணியாற்றும் பைரவா, மருத்துவக் கல்லூரி மாணவியின் பிரச்சினைகளையும், அக்கல்லூரியின் நிர்வாகத்தால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராடுவதே படத்தின் கதைக்களமாகும். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

2017-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த ‘பைரவா’, ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இப்படத்தை சிம் சினி இண்டெர்நேஷனல் நிறுவனம் தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்ய உள்ளது.

இதையும் படிங்க : மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி.. இஞ்சி வெல்லம் ரிலீஸ் எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com