துப்பாக்கிச் சுடுதல்.. வெண்கலம் வென்ற நீரஜ் குமார்; 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கு இடம்!

Neeraj Kumar Shooting Bronze Medal: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நீரஜ் குமார் வெண்கலம் வென்றுள்ளார்; 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

Published on: November 13, 2026 at 12:26 pm

தோஹா, நவ.13, 2026: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கான இடத்தையும் உறுதி செய்தார்.

இறுதிப்போட்டியில் நீரஜ் குமார் 346.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தனிநிலை நடுநிலை வீரராகப் பங்கேற்ற ரஷ்யாவின் டிமிட்ரி பிமெனோவ் 362.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், ஸ்லோவாக்கியாவின் பேட்ரிக் ஜானி 357.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தியாவின் மற்றொரு வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 323.7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். முன்னதாக, நீரஜ் குமார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், அகில் ஷியோரன் ஆகியோர் இணைந்து அணிப் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது ஒலிம்பிக் இடம் இதுவாகும். முன்னதாக, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜெய்பால் மால்வியா வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்திருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் வெற்றிப் பயணம்!
Zaheer Khan's Business Journey

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com