Inji Vellam Movie Release Date: மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Inji Vellam Movie Release Date: மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 13, 2026 at 12:36 pm
சென்னை, நவ.13, 2026: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம், 2027 ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கெனவே நடித்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.
கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இதையும் படிங்க : 3வது மனைவியை பிரிந்தார் பவன் கல்யாண்.. முடிவுக்கு வந்த 13 ஆண்டு திருமண வாழ்க்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com