ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை.. டாப் 10-ல் ரிஷப் பண்ட், சுப்மன் கில்!

ICC Test Batting Rankings: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் ரிஷப் பண்ட், சுப்மன் கில் இடம்பிடித்துள்ளனர்.

Published on: November 13, 2026 at 12:46 pm

துபாய், நவ.13, 2026: ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 713 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 697 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

இருவரும் முந்தைய தரவரிசையுடன் ஒப்பிடும்போது தலா ஓர் இடம் சரிந்துள்ளனர். மற்றொரு இந்திய வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஹ்மத் ஷா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 173 ரன்கள் குவித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் எந்தப் பிரிவிலும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 5-வது இடத்திலும், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : துப்பாக்கிச் சுடுதல்.. வெண்கலம் வென்ற நீரஜ் குமார்; 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கு இடம்!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com