Tamil Nadu Rainfall Deficit: தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவான மழை பெய்துள்ளது; இதில், டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu Rainfall Deficit: தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவான மழை பெய்துள்ளது; இதில், டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளன.

Published on: November 15, 2026 at 3:22 pm
சென்னை, நவ.15, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு புயல்கள் கடந்து சென்றுள்ள நிலையில், 38 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவான மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் பருவமழையின் இயல்பான போக்கைப் பாதிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாகப் பார்த்தால், தஞ்சாவூர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 14 வரை இயல்பாக 298.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 143.9 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. இது 52 சதவீத மழைப் பற்றாக்குறையாகும்.
டெல்டா மாவட்டங்களான திருவாரூரில் 33 சதவீதம், புதுக்கோட்டையில் 33 சதவீதம், மயிலாடுதுறையில் 32 சதவீதம், அரியலூரில் 31 சதவீதம், நாகப்பட்டினத்தில் 21 சதவீதம், கடலூரில் 31 சதவீதம் மழை குறைந்துள்ளது. இதனால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் 4 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
மொத்தம் 13 மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் கோவையில் 46 சதவீதம், ஈரோட்டில் 35 சதவீதம், திருநெல்வேலியில் 31 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. தமிழகமும் புதுச்சேரியும் சேர்த்து இயல்பான 271.9 மி.மீ. மழைக்குப் பதிலாக 259.6 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளன. இது ஒட்டுமொத்தமாக 5 சதவீத மழைப் பற்றாக்குறையாகும்.
இதையும் படிங்க : தமிழகத்தில் நவ.18ஆம் தேதி புயலுக்கு வாய்ப்பு.. மழைக்கு வாய்ப்பு உண்டா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com