“பெருமைமிக்க ஜனநாயகம் விமர்சனக் குரல்களைக் கண்டு அஞ்சுகிறது”.. சசி தரூர்

Shashi Tharoor: “பெருமைமிக்க ஜனநாயகம் விமர்சனக் குரல்களைக் கண்டு அஞ்சுகிறது” என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் எம்.பி விமர்சித்துள்ளார்.

Published on: November 15, 2026 at 2:39 pm

ஹைதராபாத், நவ.15, 2026: ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த ‘பாரத் உச்சி மாநாட்டில்’ பங்கேற்க அழைக்கப்பட்ட வெளிநாட்டுப் பேச்சாளர்களில் 115 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் 315 வெளிநாட்டுப் பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 115 பேருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், சிலரது விசாக்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும் சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், எந்தச் சட்டப் பிரிவின் கீழ் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விமர்சனக் குரல்களைக் கண்டு அஞ்சும் அளவுக்கு பெருமைமிக்க ஜனநாயகம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விசா விவகாரம் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேச்சாளர்களின் விசாக்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இதையும் படிங்க :காஷ்மீர் குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் காயம்!

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!
Supreme Court

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com