Clean Air and Blood Sugar Control: தூக்கத்தின்போது சுத்தமான காற்று, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Clean Air and Blood Sugar Control: தூக்கத்தின்போது சுத்தமான காற்று, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: November 15, 2026 at 2:56 pm
சென்னை, நவ.15, 2026: தூங்கும்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஏர் பியூரிஃபையர்களைப் பயன்படுத்துவது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் (Prediabetes) இருப்பவர்களின் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும் எனப் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள 150-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் ஒரு பிரிவினர் படுக்கையறையில் காற்றைச் சுத்திகரிக்கும் வடிகட்டிகளையும், மற்றொரு பிரிவினர் செயல்படாத வடிகட்டிகளையும் பயன்படுத்தினர்.
சுமார் 4 வாரங்கள் நடைபெற்ற ஆய்வில், HEPA காற்று வடிகட்டிகள் காற்றில் உள்ள நுண்ணிய மாசுத் துகள்களின் அளவை 36 சதவீதம் குறைத்தன. இதன் மூலம் பங்கேற்பாளர்களின் ரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களும், காலையில் உணவுக்குப் பிறகு ஏற்படும் சர்க்கரை அதிகரிப்பும் குறைந்தது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வு American Heart Journal இதழில் வெளியிடப்பட்டுள்ளது. படுக்கையறையில் சுத்தமான காற்றைப் பராமரிப்பது இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளுக்கும் உதவக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கு மாற்றாக இதைக் கருதக்கூடாது.
இதையும் படிங்க :நான்ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு பாத்திரம்.. எதில் சமைப்பது சிறந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com