“மன்மோகன் சிங் ஆட்சியை நடத்தினார்; நான் கட்சியை வழிநடத்தினேன்”.. சோனியா காந்தி!

Sonia Gandhi: “மன்மோகன் சிங் ஆட்சியை நடத்தினார்; நான் கட்சியை வழிநடத்தினேன்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 1:23 pm

புதுடெல்லி, நவ.10, 2026: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், தானும் அதிகாரங்களைத் தெளிவாகப் பகிர்ந்து செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது புதிய சுயசரிதையான Belonging: A Journey of Love நூலில் இதுகுறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், மன்மோகன் சிங் மத்திய அரசின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்ததாகவும், தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து அரசு கோப்புகள் தன்னிடம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை உள்நோக்கம் கொண்டவை என்றும் மறுத்துள்ளார்.

2004 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, தான் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என முடிவு செய்ததாகவும் சோனியா தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவை வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1991-ல் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்த மன்மோகன் சிங்கின் அனுபவமும், அவரது நற்பெயரும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உதவும் என்பதால் அவரைப் பிரதமராகத் தேர்வு செய்ததாகவும் சோனியா காந்தி தனது நூலில் விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!
Sonia Gandhi on India

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com