Owaisi Mayawati Alliance: 2027 உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க ஓவைசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Owaisi Mayawati Alliance: 2027 உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க ஓவைசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: November 9, 2026 at 11:57 am
புதுடெல்லி, நவ.9, 2026: உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெறுவதற்கான முயற்சியை சமாஜ்வாதி கட்சி நிராகரித்ததைத் தொடர்ந்து, ஓவைசி தனி அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் (BSP) கூட்டணி அமைக்க ஓவைசி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் சுமார் 21 சதவீதமும், முஸ்லிம்கள் சுமார் 19 சதவீதமும் உள்ளனர். இரு சமூகங்களையும் ஒன்றிணைத்து ‘பீம் – மீம்’ என்ற பெயரில் அரசியல் கூட்டணியை உருவாக்க ஏ.ஐ.எம்.ஐ.எம். திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநிலத்தில் 100 தொகுதிகளில் போட்டியிடவும் அக்கட்சி தயாராகி வருகிறது.
இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை விமர்சித்து வரும் ஓவைசி, முஸ்லிம் வாக்காளர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். – பி.எஸ்.பி. கூட்டணி அமைந்தால் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளதாக பாஜக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா.. சரத் பவாரிடம் ஆதரவு கோரும் பாஜக!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com