Tirunelveli Wife Murder: நெல்லையில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
Tirunelveli Wife Murder: நெல்லையில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Published on: November 9, 2026 at 12:32 pm
திருநெல்வேலி, நவ.9, 2026: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு வனோபி (34) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி வனோபி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தன. மேலும், கணவர் அருணாசலத்தையும் 4 வயது குழந்தையையும் காணவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பாக்குடி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அருணாசலமே தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அருணாசலத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 வயது குழந்தையைப் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : தீபாவளி பண்டிகை எதிரொலி.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com