Chennai Air Pollution: தீபாவளி பட்டாசு எதிரொலியாக சென்னையில் அதிகரித்த காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.
Chennai Air Pollution: தீபாவளி பட்டாசு எதிரொலியாக சென்னையில் அதிகரித்த காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.

Published on: November 9, 2026 at 12:21 pm
சென்னை, நவ.9, 2026: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 159 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பட்டாசுப் புகை காரணமாக காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை மணலி பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 246 ஆகவும், ராயபுரத்தில் 153 ஆகவும் பதிவாகியுள்ளது. அரும்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் ஒப்பீட்டளவில் திருப்திகரமாக இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு அதிகரித்துள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com