Salt Workers Relief Hike: உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Salt Workers Relief Hike: உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: November 16, 2026 at 7:07 pm
சென்னை, நவ.16, 2026: தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,000 கிடைக்கும்.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகை வழங்கப்படும். மழைக்காலத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படுவதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2026-2027-ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் 23,979 உப்பளத் தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெற உள்ளன. இதற்காக ரூ.16.78 கோடி செலவாகும் என்றும், முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com