Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

Published on: May 2, 2026 at 4:39 pm
தூத்துக்குடி, மே 2, 2026: தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் சொத்து தகராறு காரணமாக, வழக்கறிஞர் ஒருவர் தனது மகனுடன் காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக தடுத்து, இருவரையும் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது; இந்த வழக்கில், வழக்கறிஞர் டேவிட் கணேசன் (45), அவரது மகன் அஸ்வந்த் (17) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, 91 வயதான பெரியசாமி மரணத்திற்கு பின், சொத்து பங்கீடு தொடர்பான குடும்ப தகராறு காரணமாக போலீசார் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்கிடையில், பெரியசாமியின் உடல் அடக்கம் செய்யும் முன், சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று டேவிட் கணேசன் வலியுறுத்தினார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும், உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும், மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றி இருவரையும் காப்பாற்றினர். இது தொடர்பாக, குரும்பூர் போலீசார் தற்கொலை முயற்சி குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, டேவிட் கணேசன் மற்றும் அவரது மகன் அஸ்வந்த் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம்.. குற்றவாளிகள் ஜூன் 1க்குள் மேல்முறையீடு.. ஐகோர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com