பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்!

Palk Strait swimme Ishank Singh :
ஏழு வயது இஷாங்க் சிங், பால்க் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

Published on: May 2, 2026 at 4:44 pm

Updated on: May 2, 2026 at 4:45 pm

சென்னை, மே 2, 2026: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், பால்க் நீரிணையை கடந்த இளைய நீந்தல் வீரராக சாதனை படைத்துள்ளார். இஷாங்க் சிங், ராஞ்சியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவார். இவர், இலங்கையின் தலைய்மன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி (பால்க் நீரிணை) வரை 29 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும் சிங் இந்தப் பணத்தை 9 மணி 50 நிமிடங்களில் முடித்தார். தொடர்ந்து, இந்த சாதனை சர்வதேச ரெக்காட் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த நீந்தல் முயற்சி மிஷன் சமந்தர் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்தது. இதைத் தொடர்ந்து, காலை நேரத்தில் தலைய்மன்னாரில் இருந்து தொடங்கிய அவர், வலுவான அலைகள் மற்றும் கடும் நீரோட்டங்களை எதிர்கொண்டு பிற்பகலில் தனுஷ்கோடி கரையை அடைந்தார்.

இதன் மூலம், தனது வயது பிரிவில் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லியிடம் வீழ்ந்த ராஜஸ்தான்.. இன்று சென்னை- மும்பை மோதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com