7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்!

Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். தடுக்க முயன்ற அவரது மகனும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

Published on: July 31, 2026 at 2:13 pm

நாமக்கல், ஜூலை 31, 2026: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காமராஜர் நகரைச் சேர்ந்த சம்பூர்ணம் (75) என்பவர் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, இரு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவர் கூச்சலிட்டதால், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலி மற்றும் 2 சவரன் தங்க கம்மல் உள்ளிட்ட மொத்தம் 7 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அப்போது வீட்டிற்கு வந்த அவரது மகன் சுப்பிரமணியன் (50), தாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரையும் மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சுப்பிரமணியன் முதலில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார், சம்பூர்ணத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு சவரன் நகைக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!
Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com