சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது!

7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த ககன் பகதூர், டேனியல் கஸ்கார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: September 11, 2026 at 5:38 pm

சென்னை, செப். 11, 2026: வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பெருநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, சட்டவிரோதமாக மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த ககன் பகதூர் மற்றும் டேனியல் கஸ்கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். வட மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து, இங்குள்ள உள்ளூர் ஏஜென்ட்டுகளிடம் விநியோகம் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், சென்னையில் யாருக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட இருந்தது என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மு.க ஸ்டாலின் குறித்து விஜய் கருத்து.. செப்டம்பர் 12 ஆர்ப்பாட்டம்.. திமுக அறிவிப்பு!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!
INDIA IN FINAL

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com