இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.. என்ன காரணம்?

BANK STRIKE: வங்கி ஊழியர்களின் ஒருநாள் வேலைநிறுத்தம், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை, திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.

Published on: September 11, 2026 at 6:05 pm

சென்னை, செப்.11, 2026: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் வங்கி சேவைகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களிடம் காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இன்று (செப்டம்பர் 11) வெள்ளிக்கிழமை வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த தொடர் வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை காரணமாக வங்கிகளின் கிளைகளில் நேரடி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இணையவழி வங்கி சேவைகள் மற்றும் ஏ.டி.எம். உள்ளிட்ட சில சேவைகள் வழக்கம்போல் செயல்படக்கூடும்.

இந்த போராட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சத்தை கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com