Gold Rate Today : சென்னையில் அக்டோபர் 24-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,070 ஆக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220 ஆக உள்ளது.
Gold Rate Today : சென்னையில் அக்டோபர் 24-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,070 ஆக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220 ஆக உள்ளது.

Published on: October 24, 2026 at 1:48 pm
சென்னை, அக். 24, 2026: சென்னையில் இன்று (அக்டோபர் 24) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,04,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. அக்டோபர் 22-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,880-க்கு விற்பனையான நிலையில், அக்டோபர் 23-ஆம் தேதி ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480 ஆனது. இதையடுத்து இன்று விலையில் சிறிய உயர்வு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கு விற்பனையானது.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், நகைகளுக்கான செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை சேர்க்கப்படுவதால், கடைகளில் இறுதியாகச் செலுத்த வேண்டிய தொகை மாறுபடலாம்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் ஆட்டோ கட்டணம் உயருமா? – ஓட்டுநர் சங்கங்களிடம் அரசு உறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com