Gold Price Drop: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது.
Gold Price Drop: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது.

Published on: September 11, 2026 at 3:33 pm
சென்னை, செப். 11 2026: சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (செப்டம்பர் 11) திடீரெனக் கணிசமான சரிவைச் சந்தித்து நகைப் பிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.240 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,015-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 15,289 க்கும் சவரன் ரூ. 122,312 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255-க்கும் விற்பனையானது. இதற்கு முன்பு, செப்டம்பர் 3-ல் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,920-ஆகவும், செப்டம்பர் 5-ல் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்றைய திடீர் விலை வீழ்ச்சி ஆபரணச் சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிலோவுக்கு ரூ.10,000 என்ற பெருமளவிலான சரிவைச் சந்தித்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் கணிசமாக சரிவைக் கண்டுள்ளது நுகர்வோருக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ₹1,750 இருக்கிறதா? மார்க்கெட்டில் என்.எஸ்.இ IPO.. முதலீடு செய்ய ரெடியா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com