நள்ளிரவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து… 6 பேர் பலி, பலர் இடிபாடுகளில் சிக்கினர்!

Bhiwandi Building Collapse : மகாராஷ்டிராவின் பிவாண்டியில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

Published on: July 31, 2026 at 1:30 pm

Updated on: July 31, 2026 at 1:31 pm

தானே, ஜூலை 31 2026: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள கோஹினூர் (Kohinoor) கட்டிடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பாலாஜி நகர் பகுதியில் அமைந்திருந்த இந்த நான்கு மாடி கட்டிடத்தில் மொத்தம் 48 குடியிருப்புகள் இருந்ததாகவும், அந்த கட்டிடம் ஏற்கனவே ஆபத்தான கட்டிடமாக மாநகராட்சி அறிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கட்டிடத்தில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் கட்டிடத்தில் இருந்து பெரிய சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் பல குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உதவினர். இருப்பினும், சிலர் வெளியேறிக் கொண்டிருந்தபோதே கட்டிடத்தின் ‘பி’ பிரிவு முழுவதுமாக இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தானே பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மோப்ப நாய்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ள 6 முதல் 7 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com