Jewellery Theft: கும்பகோணத்தில் அண்டை வீட்டில் அடிக்கடி வந்து பழகிய இளம்பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 21 கிராம் நகையை திருடியதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.
Jewellery Theft: கும்பகோணத்தில் அண்டை வீட்டில் அடிக்கடி வந்து பழகிய இளம்பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 21 கிராம் நகையை திருடியதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

Published on: July 23, 2026 at 2:19 pm
கும்பகோணம், ஜூலை 23 2026: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மதங்கினி (45), தனது கணவர் மாரிமுத்து கடந்த 2006-ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, மகள் ஹரிணியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 12 அன்று உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க திருப்பூருக்கு சென்ற அவர்கள், ஜூலை 19 அன்று வீடு திரும்பியபோது, பீரோவில் வைத்திருந்த நகைகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மதங்கினி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மதங்கினியின் அண்டை வீட்டில் வசிக்கும் எஸ். அபிநயா (22) அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 21 கிராம் நகையை திருடியதை அபிநயா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அபிநயாவையும் அவரது கணவர் சுந்தர் (34) என்பவரையும் போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… சிகிச்சையில் இருந்த மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com