பத்திரிகையாளர் டூ முதலீட்டாளர்.. ரூ.1 லட்சம் கோடியை உருவாக்கிய சந்தீப் டாண்டன்!

Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

Published on: September 5, 2026 at 12:15 pm

மும்பை, செப்.5, 2026: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. முன்னாள் பத்திரிகையாளராகத் தொடங்கிய அவர், தரவின் அடிப்படையில் உருவாக்கிய வி.எல்.ஆர்.டி முதலீட்டு முறையால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். 1992-இல் ஹர்ஷத் மேத்தா புல் மார்க்கெட் காலத்தில் பத்திரிகையாளராக இருந்த டாண்டன், ஜி.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்டில் பயிற்சியாளராக நுழைந்தார். பின்னர் எஸ்கார்ட் மியூச்சுவல் ஃபண்ட்-ஐ சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கி, அதை குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் என மறுபெயரிட்டார்.

வி.எல்.ஆர்.டி (Valuation, Liquidity, Risk Appetite, Time) என்ற முதலீட்டு முறையை அவர் உருவாக்கினார். இது மனிதன், இயந்திரம் மற்றும் சந்தை உளவியல் ஆகியவற்றின் கலவையாகும். டாண்டன் தரவையே கடவுளாகக் கருதி, போர்ட்ஃபோலியோ மாற்றங்களைச் செய்யத் தயங்கவில்லை. விலை மற்றும் மதிப்பு இடையேயான வேறுபாட்டை ஆராய்ந்து, பணப்போக்குகள் மற்றும் சந்தை சுழற்சிகளை கண்காணிப்பதே அவரது முக்கிய தத்துவம்.

2018-இல் ரூ.235 கோடி சொத்துகளை நிர்வகித்த Quant Mutual Fund, இன்று ரூ.1.03 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கிறது. இதில் Quant Small Cap Fund மட்டும் AMC-யின் மொத்த சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. Quant Value Fund 3 ஆண்டுகளில் 21.4% CAGR ஈட்டியுள்ள நிலையில், Quant Small Cap Fund 17.6% CAGR-ஐப் பெற்றுள்ளது. இவை தங்களது பிரிவு சராசரியை விட அதிகமாகும்.

குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் பல திட்டங்கள் அதிக ஆபத்துடன் இயங்குகின்றன. உதாரணமாக குவாண்ட் வேல்யூ ஃபண்டின் ஸ்டான்டர்டு டிவியேசன் 21.5% ஆக உள்ளது. ஆனால் ஷார்ப் ரேஷியோ மற்றும் சோர்டினோ ரேஷியோ அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு ஆபத்துக்கு ஏற்ற பலன் கிடைக்கிறது. டாண்டன் பை அண்ட் ஹோல்ட் (buy-and-hold) முறையை விட, சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப வேகமாக மாற்றங்களைச் செய்வதில் நம்பிக்கை வைக்கிறார்.

குவாண்ட் மியூச்சுவல் பண்ட்டின் வெற்றியைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது, சந்தை மாற்றங்களை வி.எல்.ஆர்.டி ( VLRT) முறையால் எவ்வாறு சமாளிக்கிறது என்பதிலேயே உள்ளது. டாண்டன் “நான் நட்சத்திர ஃபண்ட் மேனேஜர் அல்ல, தரவுதான் நட்சத்திரம்” என்று கூறியுள்ளார். முதலீட்டாளர்கள் தங்கள் ஆபத்து சுயவிவரத்திற்கேற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, பல AMC-களில் பரவலாக முதலீடு செய்வது அவசியம்.

இதையும் படிங்க : வெளிநாட்டு நாணயக் கையிருப்பு புதிய உச்சம்.. எஃப்.சி.என்.ஆர் திட்டம் காரணமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com