திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… சிகிச்சையில் இருந்த மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி?

Rat Bite at Trichy GH : திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியின் கால் பெருவிரலை எலி கடித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Published on: July 23, 2026 at 2:03 pm

திருச்சி, ஜூலை 23, 2026: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் (மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை), அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியின் கால் பெருவிரலை எலி கடித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்த ஆர். தமிழ்க்கொடி (70), வீட்டில் தவறி விழுந்ததில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஜூலை 20 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவருக்கு தேநீர் கொடுக்க வந்த அவரது மகன் விஜயகுமார், தமிழ்க்கொடியின் கால் பெருவிரல் கடுமையாக சேதமடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது எலி கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்க்கொடி நீரிழிவு நோயாளி என்பதால், எலி கடித்தபோதும் அவரால் அதை உணர முடியவில்லை என்றும், வார்டுகளில் எலிகள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் மருத்துவமனை ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஜயகுமார் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அருணிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, இதுபோன்ற எந்த புகாரும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ.30 வரை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com