Nattamai : நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே கால் சீட் பெற்றுக் கொண்டு நாட்டாமை திரைப்படத்தில் படம் முழுக்க அவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.
Nattamai : நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே கால் சீட் பெற்றுக் கொண்டு நாட்டாமை திரைப்படத்தில் படம் முழுக்க அவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.

Published on: August 1, 2026 at 1:20 pm
Updated on: August 1, 2026 at 1:23 pm
சென்னை, ஆகஸ்ட் 1, 2026; நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே கால் சீட் பெற்றுக் கொண்டு நாட்டாமை திரைப்படத்தில் படம் முழுக்க அவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் தான் படம் முழுக்க வருகிறோம் என கவுண்டமணிக்கு எதுவும் தெரியாது; படம் வெளிவந்த பின்னர் படத்தில் உள்ள காட்சிகளை பார்த்து ஷாக் ஆகியுள்ளார் கவுண்டமணி.
இதுகுறித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்ட கவுண்டமணி இனிமேல் உன் படத்தில் தினந்தோறும் சம்பளம் வாங்க மாட்டேன்; ஒரு படத்திற்கு இவ்வளவு என சம்பளம் வாங்கிக் கொள்வேன் என கூறியுள்ளார். நாட்டாமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும்; இந்தப் படத்தில் நாட்டாமையின் உறவுக்காரராக கவுண்டமணி நடித்திருப்பார். படத்தில் கவுண்டமணியின் தந்தையாக நகைச்சுவை நடிகர் செந்தில் வருவார்; இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதமாக இருக்கும்.!
படத்தில் கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் காட்சிகள் மற்றும் தனது தாயை தேடும் காட்சிகள் நகைச்சுவையின் புதிய உச்சம். மேலும் நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வச்சி இருக்காரு என பேசி அடி வாங்கும் காட்சிகள் நவரச நகைச்சுவை.
இதையும் படிங்க; சாய் பல்லவி சிங்கிளா? சாய் பல்லவிக்கு எப்போது கல்யாணம் நடக்கும்? அவரே சொன்ன பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com