‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!

PM Modi Message: டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது சிலர் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பிரதமர் நரேந்திர மோடியை திட்டினார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.

Published on: August 1, 2026 at 1:34 pm

புதுடெல்லி, ஆகஸ்ட் 1, 2026: பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்பும் அவதூறும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று வலியுறுத்தியுள்ளார். தவறான பாதைக்கு சென்ற இளைஞர்களை தண்டிப்பதை விட, நாட்டின் நலனையும் தேச கட்டுமானத்தின் நோக்கத்தையும் உணர்த்தி சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலி செய்தியில், அண்மையில் புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்வை பிரதமர் மோடி குறிப்பிட்டார். அப்போது, தன்னையும் தனது மறைந்த தாயாரையும் அவதூறாக விமர்சிக்கும் வகையில் பேசப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் சம்பவத்தை நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மக்கள் கண்டதாகவும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட கோபமும் ஏமாற்றமும் இயல்பானதே என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சிறுவயது என்பது கற்றுக்கொள்ளவும், தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளவும் வேண்டிய பருவம் என்பதால், சம்பந்தப்பட்ட இளைஞர்களை நீதிமன்ற வழக்குகளில் சிக்கவைக்கவோ அல்லது சமூக ரீதியாக ஒதுக்கவோ கூடாது என்றார். அவர்களை அரவணைத்து நல்ல பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தாம் மன்னிப்பதாகவும், அதே கருணை மனப்பான்மையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞர்கள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்று தன்னம்பிக்கையுடன் முன்னேறி, நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஒவ்வொரு இளைஞரும் தங்களது கனவுகளை நனவாக்கி நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றும், வெறுப்பும் அவதூறும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து… 6 பேர் பலி, பலர் இடிபாடுகளில் சிக்கினர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com