தேர்வு முறைகேடு.. ₹10 கோடி அபராதம்.. சிறை தண்டனை எத்தனை ஆண்டுகள் தெரியுமா?

Exam Act: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கடும் தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

Published on: August 1, 2026 at 1:53 pm

புதுடெல்லி, ஆகஸ்ட் 1, 2026: பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறையற்ற செயல்களைத் தடுக்கும்) திருத்தச் சட்ட மசோதா, 2026-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

பொதுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சட்டத்தின் முக்கிய அம்சங்களின்படி, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ₹10 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க, அனைத்து மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என சட்டம் கட்டாயப்படுத்துகிறது. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்யவும் இந்தச் சட்டம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க : ‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi Message

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com