Gold Rate Today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. ரூ.1,040 குறைந்துள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. ரூ.1,040 குறைந்துள்ளது.

Published on: June 1, 2026 at 11:11 am
சென்னை, ஜுன் 1 2026: கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டு வருகின்றன. சென்னையில் தங்கம் விலை நேற்று உயர்வை பதிவு செய்த நிலையில், இன்று அதிரடியாக சரிந்துள்ளது. நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,630-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இன்று ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கும், கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 15818க்கும் ஒரு சவரன் ரூ. 126544க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க சந்தை முதலீடு.. மருந்துத் துறை எப்படி? டாப் 5 நிறுவனங்கள்.. ஓர் பார்வை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com