ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.20,799 ஆக உயர்வு.. உற்பத்தி சரிவு காரணமா?

Erode Turmeric Price Rise: ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.20,799 ஆக உயர்ந்துள்ளது; இது உற்பத்தி சரிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published on: October 14, 2026 at 4:24 pm

ஈரோடு அக்.14, 2026: ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் குறைந்துள்ளதாலும், சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு சரிந்துள்ளதாலும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.2,800 வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.19,419 முதல் அதிகபட்சமாக ரூ.20,799 வரை விற்பனையானது. கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.17,849 முதல் ரூ.19,011 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் கீழ்பவானி, தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனப் பகுதிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையம் ஆகியவற்றுக்கு மொத்தம் 2,425 மூட்டை மஞ்சள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 1,435 மூட்டைகள் மட்டுமே விற்பனையாகின. உற்பத்தி குறைவு, இருப்பு சரிவு மற்றும் சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு குறைந்துள்ளதால், வரும் நாட்களிலும் விலையில் மாற்றம் ஏற்படலாம் என விவசாயிகளும் வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க : கன்னியாகுமரி ரப்பர் விலை குவிண்டாலுக்கு ரூ.30,000 ஆக உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com