சந்தானத்தின் ‘லவ் பைட்’ திரைப்படம்.. டிசம்பர் 18 ரிலீஸ்!

Love Bite Release Date: டிசம்பர் 18-ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘லவ் பைட்’ திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 29, 2026 at 2:31 pm

சென்னை, நவ. 29, 2026: நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய அறிவிப்பு போஸ்டரும் வெளியாகியுள்ளது.

செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள இப்படம், ஜாம்பி கதைக்களத்தை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏற்கெனவே ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர், இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர், நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஃபாக்ஸ்என் இசையமைத்துள்ளார்; ஒளிப்பதிவை எஸ். யுவா மேற்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், டீசர் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த விளம்பர அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷாருக்– கரீனா.. ‘டாடி கூல்’ பாடலுக்கு உற்சாக நடனம்!

இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது: நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
Pakistani Web Series Ban in India

இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது: நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com