Shah Rukh Kareena Reunion: 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர் ஷாருக்கான் – கரீனா கபூர். இவர்கள் ‘டாடி கூல்’ பாடலுக்கு உற்சாக நடனம் ஆடியுள்ளனர்.
Shah Rukh Kareena Reunion: 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர் ஷாருக்கான் – கரீனா கபூர். இவர்கள் ‘டாடி கூல்’ பாடலுக்கு உற்சாக நடனம் ஆடியுள்ளனர்.

Published on: November 29, 2026 at 1:17 pm
மும்பை, நவ.29, 2026: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ வெளியாகியுள்ளது. இதில் இருவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
பிரபல இசைக்குழுவான போனி எம். (Boney M) வெளியிட்ட உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலை, புதிய பாலிவுட் பாணியில் இந்தப் படத்திற்காக மறுஉருவாக்கம் செய்துள்ளனர். பழைய கால இசை மற்றும் நடன பாணியை நினைவூட்டும் வகையில் பாடல் அமைந்துள்ளது. ஷாருக்கானின் ஸ்டைலும், கரீனா கபூரின் நடன அசைவுகளும் பாடலின் சிறப்பம்சங்களாக உள்ளன.
சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். வைபவி மெர்ச்சன்ட் நடன இயக்கம் செய்துள்ளார். பாடலுக்கான இந்தி வரிகளை குமார் எழுதியுள்ளார். ‘ரா.ஒன்’ திரைப்படத்திற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இருவரும் திரையில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வார்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் ₹1,000 கோடி வசூலைக் கடந்த ‘ராமாயணம்’: பாலிவுட்டில் 2-வது படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com