உலகளவில் ரூ.1,616 கோடியைக் கடந்த ‘ராமாயணா’ திரைப்படம்.. வசூலில் புதிய சாதனை!

Ramayana Movie Box Office Collection: நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம், வெளியான 17 நாட்களில் உலகளவில் ரூ.1,616.70 கோடி வசூலித்துள்ளது.

Published on: November 23, 2026 at 4:08 pm

சென்னை, நவ.23, 2026: ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம், வெளியான 17 நாட்களில் உலகளவில் ரூ.1,616.70 கோடி வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்தின் சனிக்கிழமையான நவம்பர் 21-ம் தேதி மட்டும் இந்தியாவில் ரூ.27.40 கோடி நிகர வசூல் செய்துள்ளது.

முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ரூ.15.75 கோடி வசூலித்திருந்த நிலையில், சனிக்கிழமை வசூல் 74 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.906.90 கோடியாகவும், மொத்த வசூல் ரூ.1,083.70 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.533 கோடி வசூலித்துள்ளது.

மொழிவாரியாகப் பார்த்தால், இந்திப் பதிப்பு சனிக்கிழமை ரூ.20.25 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மலையாளப் பதிப்பு ரூ.2.75 கோடியும், தமிழ் பதிப்பு ரூ.2 கோடியும், கன்னடப் பதிப்பு ரூ.1.65 கோடியும், தெலுங்குப் பதிப்பு ரூ.75 லட்சமும் வசூலித்துள்ளன. குறிப்பாக, மலையாளப் பதிப்பு 68.1 சதவீத திரையரங்கு பார்வையாளர் வருகையைப் பதிவு செய்துள்ளது.

17 நாட்களில் ரூ.1,600 கோடி வசூல் மைல்கல்லைக் கடந்துள்ள இப்படம், தற்போது ரூ.1,700 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது. மூன்றாவது வார இறுதியில் வசூல் மேலும் அதிகரிக்கும் என வர்த்தக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படிங்க : கனவுகளுக்கு சிறகளிக்கும் கதை; துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.. திரை விமர்சனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com