ராஷ்மிகாவின் ‘மைசா’ திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு.. பரபரப்பு தகவல்கள்!

Mysaa Movie Release Delay: ராஷ்மிகாவின் ‘மைசா’ திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published on: November 23, 2026 at 1:38 pm

ஹைதராபாத், நவ.23, 2026: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் மற்றும் இயக்குநர் ரவீந்திரா ஆகியோர் இணைந்து சமூக வலைதளத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர். படத்தை எந்தவிதமான சமரசமும் இன்றி, தொழில்நுட்ப ரீதியாக சிறந்த திரையரங்க அனுபவமாக ரசிகர்களுக்கு வழங்குவதற்காக வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நடிகை ராஷ்மிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட தகவலைப் பகிர்ந்துள்ளார். புதிய தேதி தனக்குத் தெரிந்ததும் ரசிகர்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரவீந்திரா புல்லே இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவா கந்துகூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவில்தான் அதிக மரியாதை, புகழ்.. நடிகை சமீரா ரெட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com