Gukesh vs Sindarov: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், குகேஷுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகிறார் சிந்தாரோவ்.
Gukesh vs Sindarov: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், குகேஷுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகிறார் சிந்தாரோவ்.

Published on: November 22, 2026 at 1:00 pm
சென்னை, நவ.22, 2026: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உஸ்பெகிஸ்தானின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தாரோவை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. 2024-ம் ஆண்டு டிங் லிரனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, இந்த முறை கடுமையான சவால் காத்திருக்கிறது.
தற்போது உலகத் தரவரிசையில் குகேஷ் 26-வது இடத்தில் 2710 புள்ளிகளுடன் உள்ளார். மறுபுறம், உலகக் கோப்பை மற்றும் கேண்டிடேட்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சிந்தாரோவ், 2782 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 72 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 14 கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். சமநிலை ஏற்பட்டால் டைபிரேக் ஆட்டங்கள் நடத்தப்படும். மொத்த பரிசுத்தொகை 25 லட்சம் அமெரிக்க டாலர்களாகும். ஒவ்வொரு வெற்றிக்கும் 2 லட்சம் டாலர் வழங்கப்படும்.
சுவிட்சர்லாந்தின் கோலோனியில் உள்ள ஃபாண்டேஷன் மார்ட்டின் போட்மர் அருங்காட்சியகத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. குகேஷுக்கு அவரது நீண்டகால பயிற்சியாளர் கிரெகோர்ஸ் கஜெவ்ஸ்கியும், சிந்தாரோவுக்கு ரோமன் விடோனியாக்கும் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். உலக செஸ் அரங்கில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.. மேத்யூ ஹைடன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com