TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம்!

TIME100 Indian Sports Stars: TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர்; வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Published on: November 20, 2026 at 12:52 pm

Updated on: November 20, 2026 at 12:57 pm

நியூயார்க், நவ.20, 2026: உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள ‘TIME100 Next India 2026’ பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 விளையாட்டு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளனர்.

மேலும், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், வில்வித்தை வீராங்கனை கும்கும் மொஹோத், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா, முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி, மீராபாய் சானு, கும்கும் மொஹோத் ஆகியோர் ‘Innovators’ பிரிவிலும், லவ்லினா, குகேஷ், வித்யா ராம்ராஜ் ஆகியோர் ‘Phenoms’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர். சவிதா புனியா ‘Leaders’ பிரிவிலும், ஹர்மன்பிரீத் கவுர், சானியா மிர்சா ஆகியோர் ‘Advocates’ பிரிவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறமையாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வளர்ந்து வரும் ஆளுமைகளை அடையாளம் காணும் நோக்கில் TIME இதழ் இந்தப் பட்டியலை முதன்முறையாக இந்தியாவுக்காக வெளியிட்டுள்ளது. இதையொட்டி, டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் விருது விழா நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : பிரபலமான குடும்பப் பெயரால் விமர்சனம்; திறமையால் மரியாதை பெற்ற மகன்: சேவாக் பெருமிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com