Hong Kong Open Badminton: ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
ஹாங்காங், நவ.19, 2026: ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் முகமது அஸ்ரின் ஆயுப் – டான் வீ கியோங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-19, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
அடுத்ததாக, சீனாவின் ஹு கே யுவான் – லின் சியாங் யி ஜோடியை இந்திய இணை எதிர்கொள்கிறது. இந்தச் சீன ஜோடி தனது முந்தைய ஆட்டத்தில் ஜப்பானின் ககேரு குமகாய் – ஹிரோகி நிஷி ஜோடியை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொள்கிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் லாரன் லாம் – அலிசன் லீ ஜோடியிடம் 20-22, 13-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய ஜோடியின் ஹாங்காங் ஓபன் பயணம் முடிவுக்கு வந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.