TVK MLA Case Petition: மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில், தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
TVK MLA Case Petition: மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில், தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Published on: November 19, 2026 at 11:58 am
சென்னை, நவ.19, 2026: கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியிலான கருத்துகள் அடங்கிய வாட்ஸ்அப் தகவல்களை அனுப்பியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றங்களாகும் என்றும், இதுதொடர்பாக டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தலைமைச் செயலரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படும் நிலையில், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக ரேஷன் கடைக்காக காத்திருக்கும் பெரம்பூர் மக்கள்.. எப்போது விடிவுகாலம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com