10 ஆண்டுகளாக ரேஷன் கடைக்காக காத்திருக்கும் பெரம்பூர் மக்கள்.. எப்போது விடிவுகாலம்?

Perambur Ration Shop Demand: 10 ஆண்டுகளாக ரேஷன் கடைக்காக பெரம்பூர் மக்கள் காத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Published on: November 19, 2026 at 11:01 am

சென்னை, நவ.19, 2026: சென்னை பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் நகரில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ராஜீவ் காந்தி பூங்கா அருகே பெரம்பூர் நெடுஞ்சாலையையொட்டி கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்பகுதியில் 12 தெருக்கள், 2 சந்துகள் உள்ளன. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக ஜமாலியா பகுதியில் உள்ள கடைக்கு சுமார் 1.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் செலவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட வேண்டிய கடை, அரசியல் மாற்றம் காரணமாக திறப்பு விழா தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடையைத் திறப்பதற்கான உத்தரவோ, தேதி குறித்த அறிவிப்போ இதுவரை கிடைக்கவில்லை என்றார். இதற்கிடையே, வார்டு 71 கவுன்சிலர் புனிதவதி அத்திராசன், ரேஷன் கடை உள்ளிட்ட மூன்று திட்டங்களைத் திறக்க மேயரிடம் தேதி கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறையை தி.மு.க ஆதரிக்குமா? கனிமொழி பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com