Anirudh Exit Rumours: ‘அரசன்’ படத்திலிருந்து அனிருத் விலகலா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்தார்.
Anirudh Exit Rumours: ‘அரசன்’ படத்திலிருந்து அனிருத் விலகலா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்தார்.

Published on: November 19, 2026 at 10:50 am
சென்னை, நவ.19, 2026: நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பதிலளித்துள்ளார்.
வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தின் கதையுலகில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, யோகலட்சுமி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் முதல்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், அனிருத் படத்திலிருந்து விலகியதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தயாரிப்பாளர் தாணு, “யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் பதிலளிக்க முடியாது. விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அவை தொடங்கப்படும்போது அனைவரும் அறிந்துகொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளிக்கு வெளியான ‘அரசன்’ புரோமோ ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தினமணி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தா பிடி. கீர்த்தி சுரேஷுக்கு தங்க மோதிரம் கொடுத்த மிஷ்கின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com