Soori New Movie: சூரி – ரவிக்குமார் கூட்டணியில் புதிய படம் தொடங்கியுள்ளது.
Soori New Movie: சூரி – ரவிக்குமார் கூட்டணியில் புதிய படம் தொடங்கியுள்ளது.

Published on: November 17, 2026 at 2:31 pm
சென்னை, நவ.17, 2026: நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவ.16) தொடங்கியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக ‘சூரி 07’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகை ராஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
கடந்த அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் இப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதல் காட்சிக்கான கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
சூரி கதாநாயகனாக வளர்ந்துள்ள நிலையில், அவரது திறமைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் படத்தை உருவாக்குவது தனது பொறுப்பு என இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சர்வதேச திரைப்பட விழா.. ‘அறிவு’ திரைப்படம் திரையிடல் தேர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com