திருமாங்கல்யத் தேங்காய் ரூ.2.55 லட்சத்துக்கு ஏலம்; பெண் பக்தர் நெகிழ்ச்சி!

Bodi Temple Auction: போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமாங்கல்யத் தேங்காயை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு, பெண் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.

Published on: November 17, 2026 at 3:02 pm

தேனி, நவ.17, 2026: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

கடந்த நவம்பர் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் மாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காயை ஏலம் விடுவது இக்கோயிலின் வழக்கமாகும். அந்த வகையில் நடைபெற்ற ஏலத்தில், விழாவில் பங்கேற்ற பெண் பக்தர் ஒருவர் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கொடுத்து தேங்காயை ஏலத்தில் எடுத்தார்.

கடந்த உத்திரத் திருவிழாவின்போது இதே கோயிலில் திருக்கல்யாணத் தேங்காய் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள்.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com