சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள்.. முழு விவரம்!

Sabarimala Pilgrim Facilities: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Published on: November 17, 2026 at 12:10 pm

சென்னை, நவ.17, 2026: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டிலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ளது.

சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை மற்றும் சபரிமலை ஆகிய 3 இடங்களில் இந்த மையங்கள் செயல்படும். பக்தர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் இங்கு வழங்கப்படும்.

சபரிமலையில் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரையும், மகரவிளக்கு திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 19, 2027 வரையும் நடைபெறுகிறது. இந்தத் தகவல் மையங்கள் ஜனவரி 20, 2027 வரை செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்பு எண்கள்:

சென்னை: 1800 425 1757 (கட்டணமில்லா எண்)

களியக்காவிளை: 9894433179, 8760668834, 9486270443

சபரிமலையில் உள்ள தகவல் மையத்தையும் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நியமிக்கப்பட்ட அலுவலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிங்க ; ரூ.6.8 கோடியில் புனரமைக்கப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான சோழீஸ்வரர் கோயில்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com