TVK MLA Controversy: தவறு செய்யும் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை இல்லை என அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
TVK MLA Controversy: தவறு செய்யும் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை இல்லை என அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

Published on: November 17, 2026 at 11:57 am
சென்னை, நவ.17, 2026: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதான புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மௌனம் காப்பதாக அதிமுக தலைமை செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில் ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் விமர்சித்தார். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமார், எம்.எல்.ஏ.வைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், சமூக ஆர்வலர் கார்த்திக் குமார் மீதான காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து நவம்பர் 19-ம் தேதி திருச்சியில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்றும், டெல்லி செல்லும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் இப்பிரச்சினை குறித்து பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : ட்ரோன் ஆய்வறிக்கை வந்ததும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை.. திருநெல்வேலி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com