TVS Family Property Dispute: டிவிஎஸ் குடும்ப சொத்துகளைப் பிரிக்கக் கோருகிறார் லட்சுமி வேணு. இவருக்கு தாயின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
TVS Family Property Dispute: டிவிஎஸ் குடும்ப சொத்துகளைப் பிரிக்கக் கோருகிறார் லட்சுமி வேணு. இவருக்கு தாயின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: November 17, 2026 at 11:37 am
Updated on: November 17, 2026 at 11:38 am
சென்னை, நவ.17, 2026: டிவிஎஸ் குழுமத்தின் குடும்பச் சொத்துகள் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், தொழிலதிபர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, குடும்பத்தின் கூட்டுச் சொத்துகளைப் பிரித்துத் தரக்கோரி தனது தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2005-ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, குடும்பச் சொத்துகளில் மகனுக்கு இணையான பங்கு மகளுக்கும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது சகோதரர் சுதர்சன் வேணுவுக்கு சாதகமாகச் சொத்துரிமைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனக்குரிய பங்கு மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பிரிவினை கோரிக்கையில் டி.வி.எஸ் டிரஸ்ட் , டி.வி.எஸ் ஹோல்டிங்ஸ், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, டி.வி.எஸ் கிரெடிட் சர்வீசஸ் மற்றும் சுந்தரம் கிளெடன் உள்ளிட்ட நிறுவனங்களில் குடும்பத்துக்கு உள்ள பங்குகளும் இடம்பெற்றுள்ளன. 2020-ம் ஆண்டு டிவிஎஸ் குடும்பத்தின் பெரிய அளவிலான சொத்துப் பிரிப்பு நடைபெற்றிருந்தாலும், தங்களது குடும்பத்திற்குள் முழுமையான சொத்துப் பிரிவு நடைபெறவில்லை என்பது லட்சுமியின் வாதமாகும்.
லட்சுமியின் கோரிக்கைக்கு அவரது தாயார் மல்லிகா சீனிவாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார். மகனுக்கும் மகளுக்கும் சம உரிமை உண்டு என்றும், வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், வேணு சீனிவாசன் தரப்பினர் ஏற்கெனவே குடும்பத்திற்குள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com